இந்த மாஸ்க் போடுங்க… கொரோனாவை கொல்லுதாம்..! புதிய கண்டுபிடிப்பு
புனே: கொரோனாவை கொல்லும் என் 95 மாஸ்க்கை தயாரித்து உள்ளதாக புனேவில் உள்ள ஒரு நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக கூறி இருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் அதன் தாக்கம் முழுமையாக போகவில்லை. எங்கு சென்றாலும் மாஸ்க் இன்றி போக வேண்டாம் என்பது மருத்துவர்களின் அத்தியாவசிய அறிவுரை.
இப்போது இரட்டை மாஸ்க் கட்டாயம் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். எல்லாம் முடிந்தது என்று கணித்திருந்த நேரத்தில் கொரோனா 3வது அலை உருவாகக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த 3வது அலை வேறு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அவர்களின் முக்கிய கணிப்பு. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் 3வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இந் நிலையில் கொரோனா வைரசை கொல்லும் ரசாயனம் வைக்கப்பட்ட என் 95 மாஸ்க் ஒன்றை புனேவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனமான இந்த நிறுவனம் என் 95 மாஸ்க்கில் கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் கெமிக்கல் ஒன்றை வைத்து இருக்கிறது.
அதன் பெயர் வைருசைட்ஸ் என்பதாகும். இது கொரோனா வைரசின் வீரியத்தை முற்றிலும் செயல் இழக்க வைக்கிறது என்பது கண்டறியப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட மாஸ்க்கை உருவாக்கி இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பெயர் thincr என்பதாகும். அதாவது think, innovative, create என்பதன் சுருக்கமே அதுவாகும்.
அரசு மருத்துவமனைகள், கல்வி நிலையங்களுக்கு இந்த மாஸ்க்கை 2 மாதங்களாக இந்த நிறுவனம் இலவசமாக வழங்கி இருக்கிறது. என் 95 மாஸ்க்கில் வேறு ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது. அதாவது இந்த மாஸ்க்கை ஓராண்டு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கேற்ப 3டி filter பொருத்தப்பட்டு உள்ளது. எப்போது இந்த மாஸ்க் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்பது தெரியவில்லை.