சென்னையில் முதல் முறை…! பெட்ரோல் பங்குகளில் 'ஷாக்' ஆகும் மக்கள்…!
சென்னை: சென்னையில் முதல்முறையாக பெட்ரோல் விலையானது 90 ரூபாயை கடந்து வாகன ஓட்டிகளை அதிர வைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. விலையேற்றத்தை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமியும் ராமரின் இந்தியாவில் தான் பெட்ரோல் விலை உச்சம் என்று கூறி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இந் நிலையில் சென்னையில் முதல் முறையாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது 90 ரூபாயை கடந்து அதிர்ச்சி அளிக்கிறது.
இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 22 காசுகள் உயர்ந்து, ரூ. 90.18 ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து உயரும் இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை அதிர வைத்துள்ளது. பெட்ரோல் போன்று டீசல் விலையும் உச்சத்தில்தான் இருக்கிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ. 83.13 ஆக விற்கப்படுகிறது.