ரஜினிகாந்த் அமெரிக்கா வருகை....! ஆனா… தனுஷ் செய்த காரியம்…?
ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு புறப்பட்ட தருணத்தில் அவரது மருமகனும் நடிகருமான தனுஷ் மட்டும் தனியாக சென்னை திரும்பிவிட்டதாக தெரிகிறது.
தமிழ் திரையுலகம் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தை பக்காவாக முடித்து கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அமெரிக்காவில் தமது மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்த தருணத்திலும் படத்தில் தமது போர்ஷனை அவர் முடித்துள்ளார்.
கொரோனா தாக்கம் குறைந்துவிட்டதால் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் சென்றுவிட்டார். ரஜினியுடன் மனைவியும், இன்ன பிற குடும்ப உறுப்பினர்களும் சென்றிருக்கின்றனர். தி கிரே மேன் ஹாலிவுட் படத்துக்காக அமெரிக்கா சென்றிருக்கும் தனுஷ் படப்பிடிப்பு முடிந்தும் குடும்பத்துடன் அங்கு நாட்களை கழித்து வந்தார்.
மாமனார் ரஜினி அமெரிக்கா வரும் போது தனுஷ்ம் அங்கே இருப்பார் என்று தான் சொல்லப்பட்டது. எனவே, அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் குடும்ப உறுப்பினர்களுடன் get together ஏற்பாடு செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், நடிகர் தனுஷ் சென்னை திரும்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவரது மனைவி ஐஸ்வர்யா, மகன்கள் அமெரிக்காவில் ரஜினிக்காக காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ரஜினியின் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அனைத்தும் முடிந்த பின்னர் 2 வாரங்கள் கழித்து அனைவரும் சென்னை திரும்புவார்கள் என்று தெரிகிறது.