இலை போட்டு சோறு ஏன் போட்டேன்…? வைரலாகும் கேப்டன் வீடியோ
சென்னை: எல்லாருக்கும் ஏன் இலை போட்டு சோறு போட்டேன் என்பதை நினைவு கூரும் கேப்டன் விஜயகாந்தின் வீடியோ தான் இப்போது டாப் வைரல்.
இவரெல்லாம் கதாநாயகனாக முடியுமா? நடக்குமா? என்பதை உடைத்தவர் விஜயகாந்த். ஆள் பார்ப்பதே கரிய நிறம், கழுத்து வரை புரளும் தலைமுடி என காட்சியளித்த விஜயகாந்த்.. பின்னர் கதாநாயகன் ஆனார், ஒட்டு மொத்த தமிழ் திரையுலகின் கேப்டனாக உருவானார்.
இப்போது மண்ணை விட்டு பிரிந்து விட்டாலும் அவரின் கடந்த கால நினைவலைகளை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் பார்த்து கண்ணீர் விடுகின்றனர். அதில் லேட்டஸ்ட்டாக, படப்பிடிப்பின் போது எல்லோருக்கும் ஏன் இலை போட்டு சோறு போட்டேன், என்ன காரணம் என்பதை பெருமையாக கூறும் வீடியோ வைரலாகி இருக்கிறது.
ஷுட்டிங் நேரத்தின் போது புரொக்ட்ஷன் டீமில் யாரையும் அவ்வளவாக சாப்பிட விடமாட்டாங்க… பொட்டல சாப்பாடு தான், நான் தான் அதை மாத்தி இலை போட்டு சோறு போட்டேன், அந்த பாகுபாட்டை உடைச்சேன் என்று அவர் பேசியிருப்பது இப்போது நினைத்தாலும் பார்ப்போரை உருக வைக்கிறது.