Sunday, May 04 01:10 pm

Breaking News

Trending News :

no image

#ElectionResults சம்பவம் செய்த காங்…! தகிக்கும் பாஜக


டெல்லி: நாடே எதிர்பார்க்கும் 4 மாநில தேர்தல் முடிவுகளில் காங்கிரசின் மாயாஜாலம் பாஜகவை திணறடித்து விட்டது.

2024ம் ஆண்டு மக்களவை தேர்தலின் சிறு முன்னோட்டம் தான் தற்போது நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல். தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரமில் தேர்ல் நடந்தாலும், மிசோரமை தவிர்த்து மற்ற மாநிலங்களின் வாக்கு பதிவு முடிவுகள் தான் அனைத்து கட்சிகளையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.

அதன் படி இன்று தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. 90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கரில் காங்கிரசும், பாஜகவும் மாறி, மாறி  முன்னிலை வகிக்கின்றன. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 47ம், காங்.41 தொகுதிகளில் என நூலிழை முன்னேற்றம் மாறி, மாறி வருகிறது.

ராஜஸ்தானில் பாஜக 107ம் காங்கிரசும் 79 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் 138 தொகுதிகளில் பாஜகவும், 89 தொகுதிகளில் காங்கிரசும் முன்னிலையில் இருக்கின்றன. தெலுங்கானாவில் கேசிஆர் கட்சி பிஆர்எஸ் அரியணையை பறிகொடுக்கும் நிலையில் உள்ளது.

மொத்தமுள்ள தொகுதிகளில் காங். 70 தொகுதிகளிலும், பிஆர்எஸ் 37 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கின்றன. 4 மாநிலங்களில் 2 மாநிலங்களில் பாஜகவும், காங்கிரஸ் 2 மாநிலங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.

5 மாநில தேர்தல் முடிவுகளும் பாஜகவுக்கே சாதகமாக அமையும் என்று அக்கட்சி நம்பிய வேளையில் வெளியாகி வரும் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Most Popular