வாழ்த்து சொன்ன ‘அழகிரி’க்கு ஸ்டாலின் செய்த ‘காரியம்’…!
சென்னை: அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அரசியலில் கருத்துக்கணிப்புகள் கூறியபடியே, திமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. தனிபெரும்பான்மை பலத்துடன் உள்ள அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் நாளை தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார்.
இந் நிலையில் மு கஅழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்கு பாதுகாப்பு கொடுங்கள், அவருக்கு பிஎஸ்ஓ எனப்படும் போலீஸ் செக்யூரிட்டி ஆபிசர் பணியில் அமர்த்துங்கள் என்று அவர் காவல்துறைக்கு வாய் மொழியாக ஸ்டாலின் கூறியதாக தெரிகிறது.
இது குறித்த தகவல் உடனடியாக மதுரையில் காவல்துறை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்காவுக்கு சென்றிருக்கிறது. மு க அழகிரியை தொடர்ந்து கொண்ட அவர் பாதுகாப்பு விவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. தம்பி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.