Sunday, May 04 12:49 pm

Breaking News

Trending News :

no image

மன்சூருக்காக த்ரிஷா பண்ணிய காரியம்…!


சென்னை; வில்லன் நடிகர் மன்சூர் அலிகானுக்காக நடிகை த்ரிஷா சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் முக்கியமான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

சும்மா இல்லாமல் வாயில் வந்ததை உளறியதால் கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டவர் நடிகர் மன்சூர் அலிகான். உச்ச நடிகர்கள் பேசியதையே தமது பாடி லாங்குவேஜில் உளறி வைக்க த்ரிஷா வடிவில் வந்தது வினை.

அவர் பற்றி மன்சூர் பேசிய கருத்து சர்ச்சையாகி பெரும் விவாத பொருளானது. வழக்கு பாய, கோர்ட் படியேறினார், போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரானார். நாட்டில் உள்ள அனைத்து பிரச்னைகளும் பின்னுக்கு தள்ளி த்ரிஷா, மன்சூர் அலிகான் விவகாரமே முன்னுக்கு வந்தது.

நிலைமை மேலும், மேலும் இடியாப்ப சிக்கலாகிவிட, மன்சூர் அலிகான் இன்று மன்னிப்பு கேட்டு த்ரிஷாவுக்காக அறிக்கை ஒன்றை விட்டு இருந்தார். அதில் சக திரைநாயகி த்ரிஷாவே, என்னை மன்னித்துவிடு என்று கேட்டு இருந்தார்.

அவரின் அறிக்கை வெளியாகிய சில மணி நேரங்களில் தற்போது த்ரிஷாவும் பதிலளித்துள்ளார். அதாவது, மன்னிப்பதாக கூறி உள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் தவறு செய்வது மனிதம், அதை மன்னிப்பதே தெய்வீகம் என்று ஆங்கிலத்தில் பதிவிட்டு உள்ளார்.

அவரின் இந்த பதிவு, கடந்த சில நாட்களாக உலகமே முக்கி முனகிய இந்த பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் பிரச்னைக்கு ஒரு வரியில் பதிவு கூறி முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷாவுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

Most Popular