செந்தில் பாலாஜி உடல்நிலை எப்படி இருக்கு…? லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை; அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையை தொடர்ந்து நெஞ்சு வலிப்பதாக கூற இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 1 மாதம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 3 நாட்களாக செந்தில் பாலாஜிக்கு உடல்நலம் பாதிக்கப்பட ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டார். பின்னர் மேலும் சில சோதனைகளுக்காக அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டடார்.
இந் நிலையில் அவருக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளதால் அதை குறைக்க மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். குடல் புண் உள்ளதால் சிறப்பு குழுவினர் சிகிச்சையை தொடங்கி உள்ளனர்.
பரிசோதனைகளுக்கு பின்னர் சிகிச்சை தொடர்ந்து அளிப்பதா இல்லையா என்பதை மருத்துவ வல்லுநர் குழு முடிவு செய்து அறிவிக்கும் என்று தெரிகிறது.