இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் TOP 10 செய்திகளை பார்க்கலாம்:
விஜயவாடாவில் அமைக்கப்பட்டு இருக்கும் உலகின் மிக உயரமான டாக்டர் அம்பேத்கர் சிலையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் இன்று திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியானது 35 பேர் கொண்ட தேர்தல் குழுவை அறிவித்துள்ளது. கேஎஸ் அழகிரி தலைமையிலான இக்குழுவில் ப சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், செல்வ பெருந்தகை உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
குஜராத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் 14 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் பலியாகி உள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தை மாதம் பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் வரும் 23ம் தேதி முதல் 26 வரை 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
நாகை, தஞ்சை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முலாயம்சிங் யாதவ் இப்போது உயிருடன் இருந்திருந்தால் ராமர்கோவில் நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொண்டு இருப்பார் என்று மருமகள் அபர்ணா யாதவ் தெரிவித்துள்ளார்.
கடும் பனிமூட்டம் எதிரொலியாக ராஞ்சியில் 19 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
608வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமைச்சர் சுப்ரமணியன் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
19 வயது உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது.