Sunday, May 04 11:47 am

Breaking News

Trending News :

no image

செஸ் காயினால் ‘டவுட்’ ஆன அர்ஜூன் சம்பத்….! என்ன நடக்குது இங்க…?


சென்னை: செஸ் காயினில் ராஜா காயினில் சிலுவை அடையாளம் எப்படி வந்தது என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கேள்வி எழுப்பி உள்ளார்.

உலக நாடுகள் வியக்கும் வண்ணம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் நடத்தி காட்டி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கிட்டத்தட்ட 164 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி கடந்த 28ம் தேதி தொடங்கியது. கடைசி நாளான நேற்று நிறைவு பெற்றது.

நிறைவு நாள் நிகழ்ச்சி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவின் இதயத்துடிப்பு என்ற முழக்கத்துடன் டிரம்ஸ் கலைஞர் சிவமணி தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா மேடையில் டிஜிட்டிலில் முன்னாள் முதலமைச்சர்கள் போட்டோக்கள் இடம் பெற்றிருந்தன. அவர்களின் சாதனைகள் பெருமைப்படுத்தி காட்சி பதிவும் வைக்கப்பட்டு இருந்தது. உலக நாடுகள் போற்றும் வண்ணம் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகளை பலரும் பாராட்டி உள்ள நிலையில், வழக்கம் போல குதர்க்கமான சர்ச்சையில் இறங்கி இருக்கிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அர்ஜூன் சம்பத் கூறி உள்ளதாவது:

செஸ் காயின்களில் குறிப்பாக ராஜாவின் அடையாளமாக ஏன் சிலுவை வந்தது! சிவன் காலம்தொட்டே ஆடப்படும் ஆட்டத்தில் எப்படி ராஜாவின் அடையாளமாக சிலுவை வந்தது! மிஷனரிகளின் நரித்தனமான வேலையே இது! என்று அர்ஜூன் சம்பத் கூறி உள்ளார்.

அவரின் இந்த பதிவை கண்டு பலரும் பொருமி தள்ளி இருக்கிறார்கள். டுவிட்டரில் பதிலடி தந்துள்ள அவர்கள் அர்ஜூன் சம்பத்துக்கு பல கேள்விகளையும் கேட்டுள்ளனர்.

செஸ் காயின், சிலுவை என்று பேசும் அர்ஜூன் சம்பத் ஏன் மிஷனரியில் படித்தார் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இன்னொருவர் சிவலிங்கத்தை இனி ராஜா காயினாக மாற்றிவிடலாம் என்று கிண்டலடித்துள்ளார்.

செஸ் காயின்கள் கருப்பிலும், வெள்ளையிலும் மட்டும் ஏன் இருக்கிறது? அதை காவி நிறத்துக்கு மாத்துங்கண்ணே என்று ஆதரவு குரல் எழுப்புவது போல் ஒருவர் கேலி செய்துள்ளார். கணக்கு பாடத்தில் வரும் கூட்டல் குறி (+) சிலுவையாக இருக்கிறது, அதை மாற்றிவிடுங்கள் என்று மற்றொருவர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

இப்படி… ஆளாளுக்கு அர்ஜூன் சம்பத்தை கலாய்த்து தள்ளி டுவிட்டர் பக்கத்தை நிரப்பி வருகின்றனர்.

Most Popular