Sunday, May 04 12:33 pm

Breaking News

Trending News :

no image

30 ஆண்டுகள் கழித்து அமைச்சராகும் அவர்…! செம ஸ்பீடில் ஸ்டாலின்…!


சென்னை: ராஜ கண்ணப்பனுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி கொடுத்திருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

திமுகவின் அமைச்சரவை பட்டியலில் பல ஆச்சரியங்கள் அணி வகுத்துள்ளன. தீவிர விசுவாசி, கடும் உழைப்பு, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்கள் என கனக்கச்சிதமாக பட்டியலிட்டு அமைச்சர் பதவியை ஸ்டாலின் கொடுத்துள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ராஜகண்ணப்பன் இப்போது தான் முதல் முறை அமைச்சர் கிடையாது. ஜெயலலிதா முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற 1991 – 1996ம் ஆண்டுகாலத்தில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, மின்துறைகளுக்கு அமைச்சராக இருந்து பணியாற்றியவர்.

எம்ஜிஆர் மீது அளவில்லா பற்றுக் கொண்டவர், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. கட்சி பணிகளை இவர் சிறப்பாகவும், கம்ப்யூட்டர் அளவுக்கு வேகமாகவும் செய்ததன் காரணமாக கம்ப்யூட்டர் கண்ணப்பன் என்று ஜெயலலிதா அழைக்கும் அளவுக்கு கோலோச்சியவர்.

2000ம் ஆண்டில் அதிமுகவில் இருந்து வெளியேறி மக்கள் தமிழ் தேசம் என்ற தனியாக கட்சியை ஆரம்பித்து ராஜபலம் காட்டியவர் ராஜகண்ணப்பன். 2006ம் ஆண்டில் தமது கட்சியை கலைத்துவிட்டு, திமுகவுடன் ஐக்கியமானார். இளையான்குடி எம்எல்ஏவாக இருந்த அவர், பின்னர் 2009ல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இருந்து விலகினார்.

2009ம் ஆண்டு மீண்டும் அதிமுக, சிவகங்ககை எம்பி தொகுதி வேட்பாளராக களம் இறங்கி குறைந்த ஓட்டுகளில் ப சிதம்பரத்திடம் தோற்று போனார். ஜெயலலிதா மறைந்த பின்னர் சசிகலா தலைமையை கடுமையாக எதிர்த்தவர். ஒரு கட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையை கடுமையாக விமர்சித்துவிட்டு திமுகவில் இணைந்தார். அவருக்கு முதுகுளத்தூர் தொகுதி கொடுக்கப்பட, அதில் வென்று இப்போது அமைச்சராக கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

Most Popular