வலிமை படத்தில் நடிகர் அஜித் ரோல் இதுதானா..? சீக்ரெட்டை உடைத்த பிரபல நடிகை
சென்னை: வலிமை படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்பது குறித்து சூப்பர் தகவல் ஒன்றை பிரபல நடிகையான சங்கீதா லீக் செய்துள்ளார்.
நடிகர் அஜித் சினிமா கேரியரில் இதுவரை இல்லாத எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது வலிமை படம். பட தலைப்பை தவிர வேறு எந்த தகவலையும், செய்தியையும் கசியவிடாமல் கண்கொத்தி பாம்பாக இருக்கிறது படக்குழு.
எல்லா சந்தர்ப்பத்திலும் அஜித்தின் வலிமை பற்றியே அவரது ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஒரு கட்டத்தில் அஜித்துக்கு தனிப்பட்ட முறையில் சில சங்கடங்களை ஏற்படுத்த அறிக்கை விட வேண்டிய நிலையும் உருவானது.
ஆனாலும் வலிமை பற்றிய எந்த தகவலையும் விடாமல் கேட்டு பட ரிலீசுக்காக ஆர்வமுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வலிமை பட நாயகி பாலிவுட் கலக்கல் நாயகி ஹிமா குரேஷி என்றும், வில்லன் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன.
இப்போது வலிமை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் விஷயம் ஒன்றை பிரபல நடிகை சங்கீதா வெளியிட்டு இருக்கிறார். இவரும் அந்த படத்தில் நடித்து வருகிறார். தமது இன்ஸ்டாகிராம் லைவ் பதிவில் இந்த சூப்பர் தகவலை வெளியிட்டு அஜித் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
அஜித் இதற்கு முன் நடித்திராத ரோல், கிட்டத்தட்ட 15 வயது குறைந்த செம ஸ்மார்ட், க்யூட் கதாநாயகனாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே பல தருணங்களில் படு ஸ்மார்ட்டான, இளமையான லுக்கில் அஜித் வலம் வந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், இந்த தகவலை கேட்டு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனராம்.
எப்போது படம் வரும் என்ற ஏக்கத்தை இந்த தகவல் மேலும் அதிகரித்து இருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆக..வலிமை படம் ரிலீஸ் ஆகும் வரை அதன் அப்டேட் என்று சுவாரசியமான தகவல்களுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம்…!