டிஎன்பிஎஸ்சி தேர்வில் மாற்றம்…! நோட் பண்ணுங்க
சென்னை: புயல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக உருமாறி உள்ளது. புயலாக மாற உள்ள நிலையில் மிக்ஜாம் என்று இந்த புயலுக்கு பெயர் சூட்டப்பட்ட உள்ளது. நெல்லூர், மசூலிப்பட்டினம் இடையே 5ம் தேதி கரை கடக்க இருக்கிறது.
புயல் அறிவிப்பின் காரணமாக தமிழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டு உள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் மெரினா கடற்கரை மூடப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இந் நிலையில், டிசம்பர் 4 மற்றும் 6ம் தேதிகளில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த உதவி கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுகள் வரும் 6,7ம் தேதிகளில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.