Sunday, May 04 11:46 am

Breaking News

Trending News :

no image

நடிகர் விஜய் படத்தை கேவலமாக பேசிய பிரபல நடிகர்…!


நடிகர் விஜய்யின் சுறா படத்தை பற்றி பிரபல இளம் நடிகர் சந்திப் கிஷன் தெரிவித்துள்ள கருத்து திரையுலகில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

திரையுலகை பொறுத்தவரை யாருக்கும் சந்தேகம் இருக்காது. நடிகர் விஜய் ஒரு மிகச்சிறந்த நடிகர், பொறுமையான நபர். அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உலகம் முழுவதும் உள்ளது.

இப்போது அவரின் முழு கவனமும் பீஸ்ட் படத்தின் மீது தான் இருக்கிறது. இந்த படத்தை அவரது ரசிகர்களும் மட்டுமல்ல… திரையுலகமே காண காத்திருக்கிறது. இந்த நடிகர் வேறு யாருமல்ல… நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை எடுத்த டைரக்டரான அதே லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்தில் நடித்திருக்கிறார்.

இந் நிலையில் நடிகர் விஜய்யின் சுறா படத்தை படு கேவலமாக சித்தரித்து உள்ளார் பிரபல இளம் நடிகர். அவர் பெயர் சந்திப் கிஷன். அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

இப்போது தான் சுறா படத்தை பார்த்தேன். பெரிய தொல்லையாக எனக்கு இந்த படம் போய்விட்டது. மண்டை சூடேறுகிறது. இந்த கதையை முதலில் கேட்கும் போது நடிகர் விஜய்க்கும் இப்படி தான் இருந்திருக்கும் என்று கூறி உள்ளார்.

அவரின் இந்த டுவிட்டரை கண்ட ரசிகர்கள், சந்திப் கிஷனை கழுவி ஊத்த ஆரம்பித்து உள்ளனர். நடிகர் விஜய் நடித்த சுறா படம் ஒரு தோல்வி படமாகும். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அதை பூர்த்தி செய்யாத படங்களில் இதுவும் ஒன்று.

Most Popular