மக்களே.. ரெடியா..? நாளை காய்கறி கடைகளை திறக்க போறாங்க…!
சென்னை: நாளை ஒருநாள் மட்டும் கோயம்பேடு காய்கறி கடைகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முழு ஊரடங்கு என்பதால் காய்கறி கடைகள், மளிகை கடைகள், கறிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. மக்களின் வசதிக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வணிகர் சங்கங்களுடன் இணைந்து தள்ளுவண்டிகளில் காய்கறிகளை விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் ஞாயிற்றுக்கிழமையான நாளை கோயம்பேடு காய்கறி கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக நாள்தோறும் காய்கறிகள், பழங்கள் விற்கப்படுகின்றன.
மக்கள் அதற்கு அமோக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் வாகனங்களில் காய்கறிக வண்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் நாளளை கோயம்பேடு சந்தை சில கட்டுப்பாடுகளுடன் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.