எல்லாம் போச்சு..! நாளை முதல் பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டருக்கு தடை…?
டெல்லி: நாளை முதல் பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தடை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்போது இருக்கும் சமகால தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகவும் பிரபலமாக இருப்பவை சமூக வலைதளங்கள் தான். பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றை பயன்படுத்தாத ஆளே இல்லை.
நாளை முதல் இவற்றுக்கு எல்லாம் ஒட்டு மொத்த தடை வர போகிறது. சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் இவை எதுவும் இயங்காது, மத்திய அரசு தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் ஒழுங்கு முறை விதிகளை மத்திய அரசு வெளியிட்ட போது அவற்றை அமல்படுத்த 6 மாதம் அவகாசம் கேட்கப்பட்டது. அந்த அவகாசம் இன்றுடன் முடிகிறது. ஆகையால் புதிய விதிமுறைகளுக்கு கட்டுப்படாத அனைத்து சமூக ஊடகங்களும் நாளை முதல் இந்தியாவில் இயங்காது என்று தெரிகிறது. ஆனாலும் கடைசி நேரமாக ஏதேனும் மேஜிக் நடக்கும் என்பது ஒரு பிரிவினர் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர் என்பது வேறு கதை.