காங். கட்சியின் புதிய டுவிஸ்ட்..! தலைவராகும் பிரியங்கா காந்தி...?
டெல்லி: பெரும் பரபரப்புக்கு இடையே இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடக்கிறது.
17வது நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. கடந்த தேர்தலை விட பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவராக இருந்த ராகுல்கந்தி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து கட்சியின் இடைக்காலத் தலைவரானார் சோனியா காந்தி.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காணொளி மூலம் நடக்கிறது. கூட்டத்தில் கட்சிக்கு புதிய தலைவர் யார் என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
சோனியா காந்தி உடல் நலத்தை கருத்தில் கொண்டு தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக ராகுல் அல்லது பிரியங்கா புதிய தலைவராக ஏற்க வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக பிரியங்கா காந்தி தலைவராவார் என்று தகவல்கள் கூறுகின்றன.