தண்டனை தர மக்கள் வெயிட்டிங்…! ஆவேச சாபம் விட்ட நாராயணசாமி..!
புதுச்சேரி: ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பாஜகவுக்கு மக்கள் தண்டனை அளிப்பார்கள் என்று நாராயணசாமி ஆவேசமாக கூறி உள்ளார்.
ஒரு வழியாக நினைத்தை முடித்தவாறு புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்த்து இருக்கிறது பாஜக. நியமன எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டு போட, புதுச்சேரி அரசு கவிழ்ந்து போனது.
அதிருப்தியுடன் அவையில் இருந்து வெளியேறிய நாராயணசாமி, தமது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்திர ராஜனிடம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம். ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது ஆளுநர் தான். நியமன எம்எல்ஏக்கள் மூலமாக ஆட்சியை கவிழ்த்த பாஜக, என்ஆர் காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மக்கள் வரும் தேர்தலில் தண்டனை கொடுப்பார்கள் என்று கூறினார்.