மறுபடியும் பழைய தொழிலை கையில் எடுத்த பிரபல டிவி பிரபலம்…!
சென்னை: குக் வித் கோமாளி புகழ், மீண்டும் தமது பழைய கார் கழுவும் தொழிலை கையில் எடுத்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் பேராதவு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் படு சேட்டை நபராக வலம் வருபவர் புகழ். தொடக்கத்தில் கார் வாஷ் செய்யும் கடையில் பணியாற்றியவர். பின்னர் படிப்படியாக முன்னேறியவர்.
அண்மையில் தாம் வாங்கிய கார் ஒன்றை பற்றி இணையத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு அசத்தினார். இந் நிலையில் லாக் டவுன் காலத்தில் தற்போது மீண்டும் கார் கழுவும் வேலைக்கு திரும்பி இருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் தாம் எப்படி இருந்தோம் என்பதை இந்த நிகழ்வால் நினைவுக்கு வருவதாக கூறியிருக்கிறார் புகழ். கார் வாஷ் தொழிலில் அவருடன் இருக்கும் நண்பரும் பழைய நினைவுகளை அசை போடுவது போன்ற வீடியோ ஒன்றையும் தமது யுடியூப் சேனலில் புகழ் வெளியிட்டு கார் கழுவுதல் பற்றிய டிப்சுகளையும் சொல்லி இருக்கிறார்.