அப்பல்லோவில் பிரபல அமைச்சர்…! திமுகவில் ‘பரபர’
சென்னை: மூத்த தலைவர், முக்கிய பிரமுகர், அமைச்சர் என பல பரிமாணங்களை கொண்ட அமைச்சர் துரைமுருகன் பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாக கடும் சளியால் அவர் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினமும், நேற்றும் பெரும் தொந்தரவாக மாற, உடனடியாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் விவரம் சொல்லி கேட்கப்பட்டது.
இதையடுத்து, சிகிச்சை எடுத்துக் கொண்டால் சிறப்பு என்று அறிவுறுத்தப்பட, சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள பிரபல அப்பல்லோ மருத்துவமனைக்கு துரைமுருகன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சளித்தொல்லைக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று மாலை அல்லது நாளை காலை அவர் வீடு திரும்புவார் என்று தெரிகிறது. அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் இருக்கும் விவரம் தொண்டர்கள் மத்தியில் பரவ தொடங்க பரபரப்பாகி உள்ளனர்.