5 நிமிஷம் தான்… கொரோனா தடுப்பூசி போட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை..!
பாட்னா: பீகார் மாநிலத்தில் பெண் ஒருவருக்கு 5 நிமிட இடைவெளியில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போட்ட அவலம் அரங்கேறி இருக்கிறது.
பாட்னாவில் இருக்கிறது புன்புன் பிளாக். அங்கு வசிப்பவர் சுனிலா தேவி. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அருகில் உள்ள பள்ளிக்கு கொரோனா தடுப்பூசி போட சென்றிருக்கிறார். அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ள வழக்கமான சோதனைகளுக்கு பின்னர் அவருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
ஊசி போட்டாச்சு… பக்கத்தில் உள்ள ரூமில் உட்காருங்க என்று அங்கிருப்பவர்கள் சுனிலா தேவிக்கு கூறி இருக்கின்றனர். அப்போது அங்கு வந்த வேறொரு நர்ஸ், அவருக்கு கோவாக்சின் தடுப்பூசியை குத்தி இருக்கிறார்.
அவரிடம் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டதாக கூற, பெரும் குழப்பம் உருவானது. 5 நிமிட கேப்பில் 2 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள விவரம் வெளியாக, சுனிலா தேவியின் உடல்நிலையை கண்காணிக்கும் பணியில் மருத்துவக்குழுவினர் இறங்கி இருக்கின்றனர். இது குறித்து நர்சுகளிடம் விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீசும் அனுப்பி உள்ளனர்.