இப்படி பண்ணினால் டெல்டா கொரோனா வைரசை ஒழிச்சிடலாம்…!
அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் டெல்டா கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என்று ஐரோப்பிய மருந்துகள் முகமை கூறி இருக்கிறது.
உலக நாடுகளுக்கு முன்னதாக இந்தியாவில் தான் டெல்டா கொரோனா என்னும் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் பெரும் நெருக்கடிக்கு அச்சாரமாக விளங்கிய இந்த டெல்டா கொரோனா, உலகின் 80 நாடுகளையும் உருட்டி போட்டது.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட முன்னணி உலக நாடுகளே டெல்டா வைரஸ் தாக்குதலால் அதிர்ந்து போயின. இந்த வைரஸ் மிக பெரிய அச்சுறுத்தல் என்று வெளிப்படையாக அறிவித்தன.
இந்த நிலைமை மாற… என்ன வழி என்பதை ஐரோப்பிய மருந்துகள் முகமை கூறி உள்ளது. அதாவது, டெல்டா கொரோனா வைரசை கட்டுப்படுத்த 2 டோஸ் தடுப்பூசியையும் போட்டு கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய மருந்துகள் முகமை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் அடுத்த கொரோனா அலை உருவாக காரணமாக இருக்க போவது டெல்டா வைரஸ் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருந்தது. இப்படிப்பட்ட தருணத்தில் ஐரோப்பிய மருந்துகள் முகமையின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.