151 பிள்ளைகள்…! ஆனாலும் 17வது கல்யாணத்துக்கு தயாரான விநோத மனுஷன்…!
கல்யாணம் பண்ணிப்பார்… வீட்டை கட்டிப்பார் என்று நம்மூரில் அடிக்கடி சொல்வது உண்டு. காரணம் அதில் உள்ள சிரமம் தான். அதிலும் சிலருக்கு பெண் கிடைப்பதே படு திண்டாட்டமாக இருக்கும். அப்படியிருக்கு ஒரு மனிதர் 16 திருமணங்கள் பண்ணிக் கொண்டு ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து 151 பிள்ளைகளை பெற்றுள்ளார்.
ஆனாலும் தமது17வது கல்யாணத்துக்கு தயாராகி வருவதாக கூறி வாய் பிளக்க வைத்துள்ளார். அவரது பெயர் மிஷெக், வயது 66. ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்தவர். தமது 17வது மனைவியை விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறி அதிர வைத்து இருக்கிறார்.
இவருக்கு முதல் கல்யாணம் நடந்தது 1983ம் ஆண்டு. அதன் பின்னர் இப்போது வரை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளாக பெற்று தள்ளி இருக்கிறார். இவருக்கு இப்போது இருக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை 151.
இத்தனை பெரிய குடும்பமாக இருந்தாலும், அனைவரின் மகிழ்ச்சியிலும் எள்ளளவு குறை என்று கூறுகிறார் இந்த மிஷெக். இப்படிப்பட்ட மனிதரின் ஆசையை கேட்டால் மயக்கம் தான் வருகிறது. சாவதற்கு முன்பாக 100 மனைவிகளையும், 1000 பிள்ளைகளையும் பெற்றெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார். தாம் இறப்பதற்குள் தமது ஆசையை எப்படியும் நிறைவேற்றி விடுவேன் என்று கூறி அலற வைக்கிறார் இந்த மிஷெக்….!