ஷங்கர் மகள் திருமணம்… லீக்கான விஷயம்.. மேடை அலங்கார செலவு இத்தனை கோடியா…?
ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமண மேடைக்கு மட்டும் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டதாக வெளியான செய்தி அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது.
படம் என்றால் இப்படி கூட இருக்குமா என்று அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் படம் எடுப்பவர் இயக்குநர் ஷங்கர். பிரம்மாண்டம் என்றால் ஷங்கர், ஷங்கர் என்றால் பிரம்மாண்டம் என்பது திரையுலகின் பார்முலா.
மிக பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து அதில் பல நவீன டெக்னாலஜியை புகுத்தி மேஜிக்கலாக படம் எடுப்பதில் ஷங்கர் கில்லாடி. படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி என்றாலும் படம் பின்னி எடுக்கும். தமது படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் அலசி, ஆராய்ந்து புதுமையை புகுத்தும் ஷங்கர் தமது மகளின் திருமணத்துக்காக அமைத்த மேடை தான் இப்போதுஅனைவரையும் கவர்ந்துள்ளது.
மண்டப செலவுடன், சிறப்பு அலங்காரம், இத்யாதி, இத்யாதி என அனைத்தும் சேர்த்து கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி மிரள வைக்கின்றன. அவரது ரசிகர்கள் இந்த தகவலை அறிந்து அரண்டு கிடக்கின்றனர்.
என்னது….? அலங்கார பொருட்களுக்கு 10 கோடியா என்று ஆச்சரியப்படுகின்றனராம். அவர் பிரம்மாண்ட இயக்குநர்… அதிலும் பல புதிய பாணிகளை காட்டியவர், இருக்காதா பின்ன என்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனராம்….!