முடிஞ்சது… டுவிட்டருக்கு போட்டாச்சு தடை…! வந்தாச்சு கூ…!
நைஜிரியாவில் டுவிட்டருக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு போட்டு உள்ளது.
நைஜிரியா நாடு மற்ற நாடுகளை போல் இல்லை. எல்லாமே அதிரடியாக தான் இருக்கும். பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நைஜிரியா அதிபர் அண்மையில் டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார்.
அவரது இந்த பதிவை டுவிட்டர் நிர்வாகம் அதிரடியாக நீக்கியது. அதனால் கோபம் கொண்ட அந்நாட்டு அதிபர் டுவிட்டருக்கு தடை என்று அறிவித்தார். அதன்படி டுவிட்டர் இப்போது தடை செய்யப்பட அதற்கு பதிலாக கூ (koo) ஆப் நடைமுறைக்கு வந்திருக்கிறது.
இந்த கூ (koo) ஆப் இந்தியாவில் உருவாக்கப்பட்டது தான் சிறப்பம்சம். இது குறித்து கூ நிறுவனம் கூறி இருப்பதாவது:
நைஜிரியா நாட்டில் கூ சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன. நைஜிரியா நாட்டின் உள்ளூர் மொழிகளையும் கூ ஆப்பில் இணைக்கப்படும். எந்த நாட்டில் கூ சேவையை நாங்கள் வழங்கினாலும் அந்நாட்டின் சட்ட திட்டங்களை மதிப்போம் என்று தெரிவித்து இருக்கிறது. இந்த கூ தளத்தை இப்போது 60 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.