இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் டாப் 10 செய்திகளை பார்க்கலாம்:
5 மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து டெல்லியில் இன்று நடக்க இருந்த INDIA கூட்டணி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
வரும் 7ம் தேதி தெலுங்கானாவின் புதிய முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்கிறார். அவருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
2019 முதல் 2021ம் ஆண்டுக்கான இடைப்பட்ட காலத்தில் 35000 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் அப்பாய்யா நாராயணசாமி கூறி உள்ளார்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு வரும் 11ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது.
564வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்று 30 நிமிடங்களுக்கு ஒரு முறை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள தொடக்கப்பள்ளி அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
நடிகர் அசோக் செல்வனின் நடிப்பில் உருவாகி உள்ள சபாநாயகன் படத்தின் 2வது பாடல் வெளியாகி உள்ளது.
கையில் ரத்தம் வழிய ஏற்பட்ட காயத்துடன் நடிகை ரித்திகா சிங் தமது போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். ரஜினிகாந்த் படத்தில் இடம்பெற்றுள்ள அவர், படப்பிடிப்பின் போது இந்த காயம் ஏற்பட்டதாக கூறி உள்ளார்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தமது 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று டாக்காவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தோற்றுவிட்ட நியூசிலாந்து இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.