நள்ளிரவு சம்பவம்…! முடிந்தது பிரபல நடிகையின் திரை வாழ்க்கை..?
சென்னை: கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள இளம்நடிகை யாஷிகா ஆனந்தின் திரையுலக வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
பிரபல இளம் நடிகை யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர். தற்போது பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் தோழி வள்ளி செட்டி பவானி, ஆண் நண்பர்களுடன் புதுச்சேரியில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பி கொண்டிருந்தார்.
காரில் வந்து கொண்டிருக்கும் போது மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்க… தோழி வள்ளிசெட்டி பவானி பலியானார். ஆண் நண்பர்கள் சிறு காயங்களுடன் தப்பி விட.. யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது கை, கால்களில் பலத்த காயம், இடுப்பு எலும்பு முறிவு என மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு இப்போது சிகிச்சையில் உள்ளார்.
சில அறுவை சிகிக்சைகளுக்கு பின்னர் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் கிட்டத்தட்ட ஓராண்டு ஓய்வு அவசியம் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர். யாஷிகா பழைய நிலைக்கு மீண்டும் திரும்ப ஓராண்டுக்கு மேலே ஆகும் என்பதை அறிந்து படம் புக் பண்ணி வைத்திருந்த தயாரிப்பாளர்கள் பெரும் அதிர்ச்சியிலும், கவலையிலும் உள்ளனராம்.
அவரை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகையால், யாஷிகாவுக்கு பதில் வேறு ஒரு நடிகையை போட்டு படத்தை முடித்துவிடலாம் என்று யோசனை செய்து வருகிறார்களாம்.
நடிகை யாஷிகா, பாம்பாட்டம், ராஜபீமா, இவன்தான் உத்தமன், கடமையை செய் ஆகிய படங்களில் யாஷிகா நடித்து வந்ததாக தெரிகிறது. ஒரு விபத்தால் தமது திரையுலக வாழ்க்கையை இழந்துள்ள யாஷிகாவின் நிலை கண்டு அவரது பெற்றோரும், நண்பர்களும் கலங்கி போய் உள்ளனர்.