பிரதமர் மோடியின் சென்னை ப்ரோகிராம்..! இதோ பயண திட்டம்
சென்னை: சென்னை வரும் பிரதமர் மோடியின் பயண திட்டம் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
மாமல்லபுரத்தில் நாளை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நடக்கிறது.189 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலக்க உள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை தொடங்கும் இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
அவரின் சென்னை நிகழ்ச்சி நிரல் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் பிரதமர் மோடி வருகை
50 நிமிடங்கள் ஓய்வு, ஹெலிகாப்டர் மூலம் 5.45 மணிக்கு ஐஎன்எஸ் அடையாறு பயணம்
கார் மூலம் 6 மணிக்கு உள்விளையாட்டு அரங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்பு
இரவு 8 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகை
நாளை மறுநாள் காலை 9.50 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
நண்பகல் 12 மணிக்கு சென்னை விமானநிலையம் To அகமதாபாத் பயணம்
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.