விநாயகரால் கதறி, கதறி அழுத 3 வயது சிறுவன்…! டாக்டர்கள் அதிர்ச்சி
பெங்களூரு: பெங்களூருவில் பிள்ளையார் சிலை விழுங்கிய 3 வயது சிறுவன் கதறி அழுத சம்பவம் டாக்டர்கள் இடையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பெங்களூருவில் 3 வயது சிறுவன் பசவா என்பவர் தமது வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த 5 செமீ பிள்ளையார் சிலையை வாயில் வைத்து விளையாடிய போது விபரீதம் நிகழ்ந்து உள்ளது.
எதிர்பாராத விதமாக அந்த சிலைய பொசுக்கென்று முழுங்கிய சிறுவனால் மேற்கொண்டு எச்சிலை விழுங்க முடியவில்லை. நெஞ்சில் ஏதோ அடைப்பது போன்று இருக்க கதறி உள்ளான்.
சிறுவனின் கதறலை கண்ட பெற்றோர் உடனடியாக பழைய ஏர்போர்ட்டில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்து,நெஞ்சு பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர்.
நெஞ்சு பகுதியில் பிள்ளையார் சிலை ஒன்று இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக என்டாஸ்கோப் சிகிச்சை அளிக்கப்பட்டது. மயக்க மருந்து கொடுத்து ஒரு மணி நேரத்தில் உள்ளே சிக்கியிருந்த பிள்ளையார் சிலை அகற்றப்பட்டது.
3 மணி நேரம் கழித்து உணவு கொடுத்த போது வெகு இயல்பாக சிறுவனால் சாப்பிட முடிந்தது. உடனடியாக சிறுவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். குழந்தைகள் விளையாடும் போது அருகில் பெற்றோர் இருந்து கவனித்து கொண்டே இருக்கும் என்று இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.