நல்லா வேலை பாத்த கலெக்டருக்கு நடந்த விஷயம்…!
சென்னை: வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பல முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு டிரான்ஸ்பர் செய்திருக்கிறது.
தமிழகத்தில் இப்போது ஆட்சி மாற்றம் நடந்து ஒரு மாதம் ஆகியிருக்கிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் என நாள்தோறும் அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரமும் மாற்றப்பட்டு உள்ளார். அவர் கூட்டுறவு சங்கங்கள் பதிவாளராக திடீரென டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருக்கிறார். 2 ஆண்டுகளாக வேலூர் மாவட்ட கலெக்டராக இருந்தவர்.
2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி வேலூரில் கலெக்டராக பொறுப்பேற்று கொண்டார். பொறுப்பேற்ற நாள் முதல் மாவட்டத்தில் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டவர். ஆனால் திடீரென டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது, அம்மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.
இதேபோன்று தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டு உள்ளார். கோவை ஆட்சியர் நாகராஜன் நில நிர்வாக ஆணையராக டிரான்ஸ்பர் செய்யப்பட்டு உள்ளார். திருவண்ணாமலை, திருவள்ளூர், அரியலூர், ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் என மொத்தம் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர்.