Sunday, May 04 12:29 pm

Breaking News

Trending News :

no image

வாயை கொடுத்து மாட்டிக்கிட்ட அண்ணாமலை…! போட்டோ வேற ரிலீசாயிடுச்சே


சென்னை: எந்த முதல்வராவது இப்படி செய்வாரா? படத்தின் டிரெய்லரை ரிலீஸ் செய்ய முதல்வர் அவசியம் என்று ஸ்டாலினை குற்றம்சாட்டிய அண்ணாமலையை சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் ஒரு படம் பொன்னியின் செல்வன். ஸ்டார் இயக்குநர் மணிரத்னம் கைவண்ணத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியாகி விட்டது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி என பெரிய நடிகர் பட்டாளே இதில் இருக்கிறது.

படத்தின் ஒவ்வொரு லேட்டஸ்ட் தகவல்களையும் ரசிகர்கள் சிலாகித்து வரும் இந்த தருணத்தில் படத்தின் டிரெய்லர் வெளியிடும் விழா நடக்க உள்ளது. டிரெய்லரை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட இருக்கிறார். படம் செப்டம்பரில் வெளியிடப்படுகிறது.

இப்படி டிரெய்லர் வெளியிடுவதை தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சிக்க, அதற்கு திமுக பதிலடி தந்துள்ளது. அண்ணாமலை கூறியது இதுதான்:

நாட்டில் ஏதாவது ஒரு முதல்வர் இப்படி ஒரு படத்தின் டிரெய்லரை வெளியிடுவாரா? அந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு செல்வார். அது நடக்கும். அவருக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வார்கள்.

கட்சியையும், குடும்பத்தையும் இணைப்பது சினிமா தான் என்பது அவருக்கு நன்றாக தெரியும் என்று கூறி இருந்தார். அவரின் இந்த விமர்சனம் பாஜக தரப்பில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது.

இப்போது அதற்கு திமுக தரப்பில் இருந்து பதிலடி தரப்பட்டு இருக்கிறது. பாஜக ஆளும் கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தெலுங்கு படமான ஆர்ஆர்ஆர் பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் என்று திமுகவின் செய்தி தொடர்பாளர் சரவணன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது ட்விட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:

கர்நாடகா இந்தியாவில் தானே இருக்கிறது?? இந்தியாவில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சென்ற முதல்வர். வாட்ஸப் பல்கலைக்கழகத்தின் முண்ணனி மாணவருக்கு சமர்ப்பணம். யாரு அந்த மாணவர் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா??? என்று கேட்டுள்ளார்.

அதோடு ட்விட்டர் பதிவில் பட நிகழ்வின் போது எடுக்கப்பட்ட போட்டோவையும் பகிர்ந்துள்ளார். கர்நாடகா முதல்வர் கலந்து கொண்ட இந்த பட நிகழ்வு கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு முந்தைய நிகழ்வாகும். அதை தேடி பிடித்து எடுத்து பதிவேற்றி இருக்கிறார். 4 மாதங்கள் முன்பு நடந்ததை போட்டு கில்லியாக பாயிண்ட்டை பிடித்து இருக்கிறார் என்று திமுகவினரும் கருத்துகளை கூறி வருகின்றனர்.

இந்த பதிலடியை பார்த்து திமுகவினர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பதிலுக்கு பாஜகவினரும், அண்ணாமலை ஆதரவாளர்களும் கடுமையான கருத்துகளை முன் வைத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் முதல்வர் செய்வது எல்லாம் இப்படித்தான், திரைப்பட விமர்சனம், திரைத்துறையினருக்கு பாராட்டு பத்திரம் தருவது, இதை கேளுங்கள் என்று சிலர் பதிவிட்டு உள்ளனர்.

இதையெல்லாம் பார்க்கும் இன்னும் சிலரோ, வாயை கொடுத்து அண்ணாமலை மாட்டிக்கிட்டாரோ? ஒரு கருத்தை முன் வைக்கும் பிளாஷ்பேக்கில் ஏதாவது நடந்திருக்கிறதா என்று தெரிந்து வைத்து கொண்டு பேசியிருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

Most Popular