சுடிதாருக்கு மாறலாம்…! டீச்சர்களுக்கு அமைச்சர் பர்மிஷன்
சென்னை: பள்ளி ஆசிரியைகள் சுடிதார் ஆடை அணிந்து பள்ளிக்கு வரலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி உள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். விழாவில் பலருக்கும் அவர் விருதுகளை வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் பேசியதாவது: ஆசிரியைகள் தங்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ப, விதிகளின்படி புடவை அல்லது சுடிதார் அணிந்து கொண்டு பள்ளிக்கு வரலாம்.
ஆசிரியர்கள் இல்லை என்றால் நாங்கள் இப்படி மேடைக்கு வந்திருக்க முடியாது. சிறப்பானவர்களாக இருக்க முடியாது. அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல… பெருமையின் அடையாளம் என்று அவர் பேசினார்.