ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு
டோக்கியோ: ஜப்பானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
அந்நாட்டின் தலைநகரான டோக்கியோவின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விரிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் ஏதேனும், சேதம் ஏற்பட்டதா, உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக என்று தகவல்கள் வெளியாகவில்லை.