Sunday, May 04 11:56 am

Breaking News

Trending News :

no image

காலை 8 மணிக்கு தொடங்கியது கவுண்ட்டிங்….! யார், எந்த தொகுதியில் முன்னிலை…?


சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை அறிவித்தப்படி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளது.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், அசாமில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. கேரளா, தமிழகம், மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அனைத்து மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அறிவித்தப்படி இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

மொத்தம் 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பதிவான அனைத்து வாக்குகளும், தனித்தனி அறைகளில் எண்ணப்பட்டு வருகின்றன.

ஓட்டு எண்ணிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதால் வாக்கு எண்ணும் மையங்களில் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பொதுமக்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வேட்பாளர்கள், முகவர்கள், பத்திரிக்கையாளர்கள், தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் நுழைய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. செல்போன், கேமரா, குடை, தின்பண்டங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. வாக்கு எண்ணும் மையங்களில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 5 மாநில தேர்தல்களிலும் முற்பகல் 11 மணி முன்னணி நிலவரங்கள் தெரிய வரும்.

Most Popular