நம்பாதீங்க…! சொன்னா கேளுங்க…! பதறிய ரஜினி பட டைரக்டர்
சென்னை: சொன்னா கேளுங்க, அதை நம்பாதீங்க, நான் அதிலெல்லாம் இல்லீங்க என்று கூறி பதிவை வெளியிட்டு இருக்கிறார் பிரபல இளம் சினிமா இயக்குநர்.
கோலிவுட்டில் இப்போது இளைஞர்கள் பட்டாளம் தான். புது புது கதைக்களம், டெக்னாலஜி, லொகேஷன் என்று போட்டு தாக்கி பெரிய ஹீரோக்களை அதகளம் பண்ணி வருகின்றனர்.
அவர்களில் மிக முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். லியோ படத்தை அடுத்து ரஜினியின் 171 வது படம் அவர் கைவண்ணத்தில் வர இருக்கிறது. இது தவிர பைட் கிளப் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்து இருக்கிறார்.
இப்படி அவர், பிசியாக போய் கொண்டிருக்க இணையதளத்தில் லோகேஷை பற்றி ஒரு செய்தி. அவரின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டது என்பது தான் அது.
இதை அறிந்த லோகேஷ் விழுந்தடித்துக் கொண்டு இணையத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். தாம் பேஸ்புக்கில் இல்லை, இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கங்களில் மட்டுமே உள்ளேன் என்று கூறி இருக்கிறார்.
தயவு செய்து போலி கணக்குகளை நம்ப வேண்டாம், புறக்கணியுங்கள், அதை தொடராதீர்கள் என்றும் தெளிவுப்படுத்தி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் பதிவு இதோ;