பாரதி பாஸ்கர் உடல்நிலை எப்படி இருக்கு..? மருத்துவர்கள் முக்கிய தகவல்
சென்னை: பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் இப்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டு உள்ளது.
மேடை பேச்சாளர்களில் தவிர்க்க முடியாத நபராக மாறிவிட்டவர் பாரதி பாஸ்கர். அவரின் பட்டிமன்ற பேச்சுகளை ரசிப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.
அதுவும் ராஜாவுடன் போட்டி போட்டு கொண்டு அவர் அடிக்கும் கவுண்ட்டர்கள் ஏக பிரசித்தம். தம்முடைய அசத்தல் பேச்சால், கருத்துகளினால் மக்கள் மனங்களை கவர்ந்த பாரதி பாஸ்கர் சென்னையில் உள்ள பிரபல வங்கியில் உயர் பொறுப்பில் உள்ளார்.
கடந்த வாரம் திடீரென அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது.
மருத்துவமனையில் பாரதி பாஸ்கர் அனுமதிக்கப்பட்டு உள்ள விவரம் அறிந்த ரசிகர்கள் கவலைப்பட்டனர். அவர் குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர்.
இந் நிலையில் பாரதி பாஸ்கர் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றிய முக்கிய தகவலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அவரது உடல்நிலை தேறி வருவாதகவும், படிப்படியாக இயல்பான நிலையை நோக்கி அவர் திரும்பி வருகிறார் என்று மருத்துவமனை கூறி உள்ளது.
இன்னும் ஒரு வாரம் வரை மருத்துவமனையில் அவர் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டிஸ்சார்ஜ் தருணத்தில் பாரதி பாஸ்கர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.