ஸ்கூல்ல எனக்கும் பாலியல் தொல்லை நடந்துச்சு..! 96 பட நடிகை ‘பகீர்’ தகவல்…
சென்னை: எனக்கும் பள்ளியில் பாலியல் தொல்லை நடந்ததாக 96 பட நடிகையான கவுரி கிஷன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கேகே நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை குறித்து நாளும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. போலீசின் விசாரணை ஒரு பக்கம் இருக்க.. அதே போன்ற பாலியல் சம்பவங்கள் பற்றிய விவரங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் 96 படத்தின் ஜானுவாக நடித்த நடிகை கவுரி கிஷன் தமக்கும் பாலியல் அரங்கேறியதாக பகீர் தகவல் வெளியிட்டு உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:
பிஎஸ்பிபி பள்ளியில் நடந்த சம்பவத்தை பார்க்கும் போது அடையாறில் இந்து சீனியர் செகண்ட்ரி பள்ளியில் எனக்கு நடந்தவை ஞாபகத்துக்கு வருகிறது. உடலை பார்த்து கிண்டல் செய்வது, சாதி ரீதியாக பேசுவது, பழி சுமத்துவது என அனைத்தும் நடந்தது. பிஎஸ்பிபி பள்ளியில் நடந்ததை பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.
குழந்தை பருவத்தில் ஏற்படும் பிரச்னைகள், வளர்ந்து நாம் ஆளாகும் போது பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகி விடுகிறது. பாதிக்கப்பட்ட பலரும் என்னை போன்று வெளியில் வந்து சொல்ல வேண்டும். உங்கள் ஏற்பட்ட அனுபவங்களை சொல்லுங்கள் என்று கூறி உள்ளார்.