ரோட்டை ஜாம் ஆக்கிய விமானம்…! இதென்ன கூத்து…! VIRAL VIDEO
விமானம்னா அது வானத்துல தான் பறக்கும், ஆனா பீகார் மாநிலத்தில் ஒரு பாலத்தின் அடியில் விமானம் சிக்கி போக்குவரத்தை அடியோடு மாற்றி இருக்கிறது.
அசாம் மாநிலத்தில் இருந்து மும்பைக்கு விமானம் ஒன்றின் பாகம், லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. மிக பிரம்மாண்டமான அந்த பாகத்துடன் லாரி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
பீகார் மாநிலம் மோதிஹாரி என்ற பகுதிக்கு வந்த போது அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. சாலையில் உள்ள பாலத்தின் அடியில் லாரி நுழைந்திருக்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக விமானத்தின் பாகம் லாரியின் அடியில் சிக்கியது.
சிக்கிய வேகத்தில் லாரியும் நகரமுடியவில்லை, விமான பாகத்தையும் எடுக்க முடியவில்லை. பரபரப்பான பாலம் என்பதால் எங்கு பார்த்தாலும் வாகனங்கள் அணிவகுத்து நின்று பெரும் போக்குவரத்து நெருக்கடி ஆனது.
இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் களத்தில் மீட்டனர். அவர்களுக்கு லாரி ஓட்டுநரும் கைகொடுக்க ஒருவழியாக விமானத்தையும், லாரியையும் அவர்கள் மீட்டனர்.
இந்த விசித்திரமான சம்பவத்தை அங்குள்ள ஒருவர் தமது செல்போனில் வீடியோவாக பதிவேற்றி இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்க்கும் பலரும் இது என்ன கூத்து என்ற ரீதியில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
அந்த வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.