Sunday, May 04 01:10 pm

Breaking News

Trending News :

no image

‘தீண்டாமை’ தியேட்டரின் பிராடுத்தனம்…! பால்கனி டிக்கெட் ரூ.15


சென்னை: நவீன தீண்டாமையை கடைபிடித்த சென்னையின் பிரபல தியேட்டர் வரி ஏய்ப்பு செய்ததாக வெளியான விவகாரம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

உலகம் எங்கோ போய் கொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் தீண்டாமை என்று கொடுமை ஒழிந்தபாடில்லை. அதற்கு அக்மார்க் உதாரணமாக மாறியது சென்னைய்ல உள்ள ரோகிணி தியேட்டர்.

சிம்புவின் பத்து தல படத்தை பார்க்க வந்த நரிக்குறவர் இன மக்களை தியேட்டர் ஊழியர் உள்ளே விட மறுக்க (டிக்கெட் இருந்தும்) அந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. கடும் கண்டனங்கள், விமர்சனங்கள் என எழு, பூசி மெழுகிய தியேட்டர் நிர்வாகம் பின்னர் அவர்களை தியேட்டரில் அனுமதித்தது.

நிலைமை இன்னும் சூடு மாறாமல் உள்ள நிலையில் ரோகிணி தியேட்டரின் லட்சணம் என ஒரு செய்தி இணையத்தில் உலா வருகிறது. தியேட்டர் நிர்வாகம் வரி ஏய்ப்பு செய்துள்ளது என்று கூறி சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது 2019ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி வரை தியேட்டரின் டிக்கெட் கட்டணம் எவ்வளவாக இருந்தது என்று விவரம் வெளியாகி இருக்கிறது.

பால்கனி டிக்கெட்  ரூ.15

1st  class – ரூ.10

2nd class – ரூ.8

3rd class – ரூ.5  மட்டும் தான் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட விவரம் சென்னை மாநகராட்சியின் மூலமாக தெரிய வந்திருக்கிறது.

இந்த விவரம் வெளியானதை அறிந்த பலரும் இப்போது கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். ஆளும் அரசாங்கத்துக்கு தெரியாமல் இருக்காது, இந்த தவறுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கலாம். உரிய நடவடிக்கையை இனியாவது எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளும், வலியுறுத்தல்களும் எழ ஆரம்பித்துள்ளன.

Most Popular