Sunday, May 04 11:47 am

Breaking News

Trending News :

no image

இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பெரியாரும், அண்ணாவும் போல…! அமைச்சர் உதயகுமார் ‘கலகல’


சென்னை: இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் அண்ணன், தம்பிகள் என்று அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளார்.

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் இன்னும் முரண்பாடுகள் உள்ளன. இபிஎஸ், ஓபிஎஸ் என இருவருமே தாம் தான் முதல்வர் வேட்பாளராக்கப்பட வேண்டும் என்று உறுதியாக இருப்பதால் அதிமுகவில் கடும் குழப்பம் நிலவி வருகிறது.

கட்சி செயற்குழுவில் இந்த பிரச்னை பெரிதாக எடுக்க, வரும் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்த தருணத்தில் கடும் அதிருப்தியில் ஓபிஎஸ்சை, இபிஎஸ் தூதுவர்களான அமைச்சர்கள் பலரும் சந்தித்து சமாதானப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், யாரிடமும் சரியாக பேசாமலும், கடும் அதிருப்தியுடன் ஓபிஎஸ் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந் நிலையில் அமைச்சர் உதயகுமார் நேற்று ஓபிஎஸ்சை சந்தித்துவிட்டு வந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் அண்ணன் தம்பிகள் என்றார்.

உடம்பு சரியில்லை என்று ஓபிஎஸ் சொன்னதால் தான் சென்னை மாநகராட்சி நிகழ்ச்சிக்கு அவரை அழைக்கவில்லை என்றார். இருவருமே அண்ணன், தம்பி என்ற புரிதலோடு உள்ளனர், சரியான புரிதலோடு பெரியாரும், அண்ணாவும் போல இருக்கின்றனர் என்று கூறினார்.

 

Most Popular