நான் நடிக்கணும்னு ஆசைப்பட்ட படம்…! ரஜினி சொன்ன சீக்ரெட்….
சென்னை: வரலாற்று படத்தில் தாம் நடிக்க விரும்பியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
யாரும் நினைத்து பார்க்க முடியாத கதைகளத்தில் வித்தியாசமான ஒன்றை செய்வதில் ஆர்வம் கொண்டவர் நடிகர், இயக்குநர் பார்த்திப. இவரின் ஒத்த செருப்பு படம் பார்ப்போரை பிரமிக்க வைத்தது. தற்போது தானே இயக்கி நடித்து வெளியாகி இருக்கும் இரவின் நிழல் படமும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஒரே ஷாட்டில் நான் லீனியரில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், பார்த்திபனை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். அவருக்கு ஒரு வாழ்த்து மடலையும் தந்துள்ளார்.
பார்த்திபனிடம் பொன்னியின் செல்வன் படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து ஆர்வமுடன் கேட்ட ரஜினிகாந்த், தாமும் இதுபோன்ற வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன் என்று கூறி உள்ளார்.
பொன்னியின் செல்வன் போன்ற மிக சிறந்த அரசர்கள் படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்பது ரஜினியின் ஆசையாக இருந்தது. அதை தான் அவர் இப்படி கூறி உள்ளார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.