டெய்லி மாட்டு மூத்திரம் குடிச்சேன்…! கொரோனா வரல…! பாஜக எம்பி ‘கலகல’..!
டெல்லி: நான் தினமும் மாட்டின் சிறுநீர் குடிப்பதால் கொரோனா வரவில்லை என்று பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் கூறி உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா எட்டுக் திக்கும் பரவியிருக்க இந்த மாட்டு மூத்திரம் பிரச்னை ஓயாது போல் இருக்கிறது. வட மாநிலம் ஒன்றில் சில நாட்கள் முன்பாக மாட்டு சாணக்குளியல் விவகாரம் பெரும் சர்ச்சையானது.
கொரோனாவுக்கு எதிராக மருத்துவ உலகம் தீவிரமாக போராடி கொண்டிருக்கும் தருணத்தில் இதுபோன்ற விஷயங்கள் பெரிதாக பேசப்பட்டன. மருத்துவ சிகிச்சை முறைகள் ஒரு பக்கம் இருந்தாலும், கொரோனாவை விரட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலர் விதவிதமான கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.
இந்தியாவில் கொரோனா வாழ உரிமை இருக்கிறது என்று முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவுத் கூறி வியக்க வைத்தார். இப்போது லேட்டஸ்ட்டாக மாட்டின் சிறுநீர் குடிப்பதால் தமக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் கூறி அதிர வைத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசி இருப்பதாவது: தினமும் கோமியத்தை குடித்தால் கொரோனாவால் ஏற்படும் நுரையீரல் தொற்றை சரியாக்கிவிடும். நான் தினமும் கோமியம் குடிக்கிறேன். ஆகையால் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எனக்கு கொரோனாவும் இல்லை என்று கூறி இருக்கிறார்.