யாரும் பார்த்திராத அப்பா போட்டோ.. ரிலீஸ் செய்த பிரபல நடிகை…! செம..!
தந்தையர் தினமான இன்று அப்பாவுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு அசத்தி இருக்கிறார் நடிகை நதியா.
1980, 90களில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தவர் நடிகை நதியா. அவரது பொட்டு, நதியா கம்மல், நதியா டிரெஸ் ஏன் பிரபல கம்பெனியின் சைக்கிள் கூட நதியா சைக்கிள் என்றே அடையாளப்படுத்தப்பட்டது. இன்னும் சொல்ல வேண்டுமானால் அப்போது துணிக்கடைகள் கூட நதியா துணிக்கடைகள் என்று முளைத்தன.
சினிமாவில் உச்சத்தில், நல்ல மார்க்கெட்டில் இருந்த தருணத்தில் திரைத்துறையில் இருந்து நதியா விலகி அதிர்ச்சி அளித்தார். பல ஆண்டுகள் கழித்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார். அதன்பிறகு சில புகழ்பெற்ற விளம்பர நிறுவனங்களில் நடித்தார்.
இந் நிலையில் தந்தையர் தினத்தில் அவர் வெளியிட்டு உள்ள போட்டோ பாராட்டுக்களை பெற்றுள்ளது. தமது அப்பாவுடன் அவர் இருக்கும் போட்டோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு தந்தையர் தின வாழ்த்துகளை வெளியிட்டு அசத்தி உள்ளார்.
தந்தையர் தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ள அவர், அன்பு, பாதுகாப்புக்கு நன்றி என்றும் கூறி இருக்கிறார் நதியா. யாரும் பார்த்திராத இந்த போட்டோவை காணும் ரசிகர்கள் இதை பலருக்கும் பகிர்ந்து வருகின்றனர்.