அசிங்கப்பட்ட உதயநிதி..? வம்பிழுத்த கிரிக்கெட் பிரபலம்
சனாதனத்தை இழிவுபடுத்தினால் இப்படித்தான் நடக்கும் என்று 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றி கிரிக்கெட் பிரபலம் வெங்கடேஷ் பிரசாத் கூறி இருக்கிறார்.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. அதில் தெலுங்கானாவில் காங்கிரசும், மற்ற 3 மாநிலங்களில் பாஜகவும் ஆட்சியை பிடித்துள்ளன.
முடிவுகள் ஒரு பக்கம் வெளியாகி கொண்டே இருக்கும் தருணத்தில் அரசியல்வாதிகள், பிரபலங்கள் பலர் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கிரிக்கெட் பிரபலம் வெங்கடேஷ் பிரசாத் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது:
சனாதனத்தை இழிவுபடுத்தியதால் வந்த வினை இது. அமோக வெற்றி பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி பிரதமர் மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி. சிறப்பாக பணி செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறி உள்ளார்.
அவரின் இந்த பதிவு நடிகர் உதயநிதியை மையமாக வைத்தே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்ற தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. ஏன் என்றால் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று செல்லும் இடங்களில் எல்லாம், மேடைகளில் முழங்கியவர் உதயநிதி ஸ்டாலின்.
அவரை மனதில் வைத்தே இந்த பதிவு என்று பொருமுகின்றனர் உதயநிதி ஆதரவாளர்கள். சிலரோ, சனாதனத்தை எதிர்த்தார் என்பதற்காக இப்படியா குத்திக்காட்டுவது? அசிங்கப்படுத்துவது?
தெலுங்கானாவிலும் தான் பாஜக போட்டியிட்டது, ஆனால் தோற்றுபோய் விட்டது, அதற்கு மக்களின் சனாதன எதிர்ப்பு தான் காரணம் என்று கூறி விட முடியுமா?
பாஜகவுக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்றால் நேரிடையாகவே ஆதரவு தெரிவிக்கலாம், எதற்கு இப்படி ஒரு அவசியம் இல்லாத பதிவு என்றும் கருத்துகள் பதிவாகி இருக்கின்றன.