Sunday, May 04 11:58 am

Breaking News

Trending News :

no image

மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்..! டாஸ்மாக் எடுக்கும் முக்கிய முடிவு…?


சென்னை: டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மாற்றி அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. அரசுக்கு அதிக வருவாயும் இதன் மூலம் கிடைக்கிறது. ஆகையால் கொரோனா காலத்திலும் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

தற்போதும் கொரோனா காலம் என்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 5000 மதுக்கடைகள் உள்ளன. வழக்கமாக நண்பகல் 12 முதல் இரவு மணி 10 வரை அவை திறந்திருக்கும். இப்போது காலை 10 முதல் இரவு 8 மணிவரை கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

ஆனால் கொரோனா காலநெருக்கடியில் மதுக்கடைகளில் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவது இல்லை என்ற குரல்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. மதுபிரியர்களை ஒழுங்குப்படுத்த முடியாமல் கடை ஊழியர்களும் கடும் அவஸ்தைபடுகின்றனர்.

கொரோனா 3வது அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக, டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அதாவது ஒரு மணி நேரம் முன்னதாக கடைகள் அடைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெகு விரைவில் அரசிடம் அனுமதி கோரப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

Most Popular