Sunday, May 04 12:04 pm

Breaking News

Trending News :

no image

கொரோனா போர் முடியல...! மக்களே.. எப்போதும் மாஸ்க் போட்டுக்குங்க...!


டெல்லி: கொரோனா போர் முடியல... எனவே மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் வானொலி மூலம் பேசி வருகிறார். இந் நிகழ்ச்சியில் அவர் முக்கியமான அறிவிப்புகளை அவ்வப்போது அறிவிப்பார்.

இந் நிலையில், இன்று மான் கி பாத்  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனாவில் இருந்து குணமடைவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாட்டிற்கு எதிரான விஷயங்களை பரப்பாதீர்கள் சமூக வலைதளங்களில் நாட்டுக்கு எதிரான விஷயங்களை பரப்பும் தவறை செய்ய வேண்டாம்.

இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள். கார்கில் போர் நடந்த விதத்தை இந்தியா மறக்காது. இந்திய நிலத்தை கைப்பற்றலாம் என பாகிஸ்தான் தவறாக நினைத்து, பாகிஸ்தான் உள்ளே நடக்கும் உள்நாட்டு பிரச்சனையை திசை திருப்ப பாகிஸ்தான் இப்படி செய்தது.

ஆனால், அந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. ஒருபுறம் கொரோனாவை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மற்றோரு புறம் பொருளாதாரத்தை சரிசெய்ய  சூழ்நிலையில் இருக்கிறோம் என்று கூறினார்.

Most Popular