மிட்நைட் போன்… மாணவிக்கு குளியல்… அம்பலமாகும் சிவசங்கர் பாபா..?
சென்னை: பிரபல சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு உதவியாக இருந்தவர்களிடம் இருந்து சிபிசிஐடி நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் இருக்கிறது சுஷில்ஹரி சர்வதேச பள்ளி. இங்கு படிக்கும் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது பள்ளியின் நிறுவனரான பிரபல சாமியார் சிவசங்கர் பாபா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.
தொடர் புகார்கள், பாலியல் குற்றச்சாட்டுகள் அணிவகுக்க வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரணை தீவிரமாக்கப்பட்டது. விஷயம் அறிந்த சிவசங்கர் பாபா டேராடூனில் இருந்து எஸ்கேப்பாகி கடைசியில் டெல்லியில் போலீசில் சிக்கினார். இப்போது உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் சிவசங்கர் பாபா மீதான புகார்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு தகவல்களையும் கேட்டு சிபிசிஐடி போலீசார் கிறுகிறுத்து போயுள்ளனராம்.
சிவசங்கர் பாபா போன்றே அங்குள்ள ஆசிரியைகள் பாரதி, தீபா, சிஷ்யை சுஷ்மிதா ஆகியோர் கைதாகி உள்ளனர். அவர்களில் சுஷ்மிதா சுஷில்ஹரி பள்ளியில் படித்து சிவசங்கரின் சிஷ்யையாக மாறியவர். அவரது படிப்பு முதல் திருமணம் வரை அனைத்து செலவுகளும் சிவசங்கர் பாபாவின் பொறுப்பாம்.
பாபாவுக்கு பிடித்த மாணவிகளை ப்ரெய்ன் வாஷ் செய்வது தான் சுஷ்மிதாவின் பிரதான வேலையாம். பேசி பேசியே மாணவிகளை வழிக்கு கொண்டு வந்து பாபாவிடம் சேர்ப்பாராம். இவருக்கு அடுத்த படியாக மாணவிகள் கைகாட்டிய ஹாஸ்டல் வார்டன் நீரஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அதில் தான் நம்பவே முடியாத திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதாம்.
மிட் நைட்டில் நீரஜாவுக்கு பாபாவிடம் இருந்து போன் போகுமாம். உடனடியாக அவர் மாணவிகள் அறைக்கு போய் பாபா சொன்ன மாணவியை எழுப்பி குளிக்க வைத்து பாபாவின் ரூமுக்கு அழைத்து செல்வாராம். இப்படி நிறைய மாணவிகளின் வாழ்க்கையை நீரஜாவும், சிவசங்கர் பாபாவும் சீரழித்து உள்ளனராம்.
விசாரணையில் கிடைத்த இந்த தகவல்கள் குறித்து நீரஜாவிடம் போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால் அதை அனைத்தையும் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. தொடர் விசாரணையில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.