Sunday, May 04 12:51 pm

Breaking News

Trending News :

no image

அண்ணாமலை டவுசர்…! போட்டு தாக்கும் அமைச்சர்


சென்னை: தம்பி அண்ணாமலை … என்று தொடங்கும் அமைச்சர் மனோ தங்கராஜின் பதிவு வேற லெவலுக்கு செல்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

டாஸ்மாக் சர்ச்சையை தொடர்ந்து தற்போது பாஜக ஆவின் பால் விவகாரத்தை கையில் எடுத்து சதிராட்டம் ஆட தொடங்கி உள்ளது. ஒவ்வொரு அமைச்சராக டார்க்கெட் செய்து வரும் அண்ணாமலை ஆவின் பால் விவகாரத்தை முன் வைத்து அறிக்கையும், பேட்டியும் விட்டுக் கொண்டு இருக்கிறார்.

விட்டேனா பார் என்று அமைச்சர் மனோ தங்கராஜூம் பதிலுக்கு பதில் சமூக வலைதளத்தில் பதிவுகளை போட்டு தாக்குகிறார், பேட்டியில் கொதித்து எழுகிறார். அவரின் லேட்டஸ்ட் பதிவு தான் இப்போது சமூக வலைதளத்தில் வைரல்.

அமைச்சர் மனோ தங்கராஜின் பதிவு:

இவ்வளவு தானா!!!

தம்பி அண்ணாமலை, தாங்கள் கால்ச்சட்டை போடுவதற்கு முன்பே (1988) பேச்சிப்பாறை நீர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம், கனிம வள பாதுகாப்பு போராட்டம் என எத்தனையோ மக்கள் பிரச்சனைகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் நான் ஏறி இறங்கிய வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தம்பியின் மான நஷ்ட வழக்கை பார்த்து ஓடி ஒளியவா போகிறேன்?

ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த #வடநாட்டுகைக்கூலி_அண்ணாமலை என்று கூறுவது ஏனோஎன்று பதிவிட்டு உள்ளார்.

அமைச்சரின் இந்த பதிவுக்கு ஆதரவு இருப்பது போல, அதற்கு சரி சமமாக பாஜக விரும்பிகள் மற்றும் அபிமானிகள் மனோ தங்கராஜின் கடந்த காலங்களை தோண்டி துருவி எடுத்து போட்டு தாக்கி வருகின்றனர்.

Most Popular