தோற்றாலும் பிரதமர் மோடி சொன்ன வார்த்தை…! அதுவும் என்ன மொழியில் தெரியுமா..?
டெல்லி: சட்டசபை தேர்தலில் ஆதரவளித்த தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி தமிழில் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
கடினமாக உழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்று 20 தொகுதிகளில் களம் கண்டது. 234 தொகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கிறது.