Sunday, May 04 01:11 pm

Breaking News

Trending News :

no image

ஆறால் அரியணை ஏறும் காங்…! தெலுங்கானாவில் தெறி…!


டெல்லி: தெலுங்கானாவில் அரியணை ஏறும் காங்கிரசுக்கு 6 மேஜர் விஷயங்கள் கை கொடுத்துள்ளன.

தெலுங்கானாவில் 119 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் முடிந்து இன்று முடிவுகள் வெளியாகி வருகின்றன. கருத்துக்கணிப்புகள் சந்திரசேகர ராவ் கட்சியான பிஆர்எஸ்சுக்கும், காங்கிரசுக்கும் விடாப்பிடி முடிவுகளாக அமையும் என்றும் இழுபறி என்றும் தெரிவித்தன.

சில கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறி இருந்தன. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் தற்போது காங்கிரஸ் அரியணை ஏற உள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 65 தொகுதிகளிலும் பிஆர்எஸ் 41 தொகுதிகளிலும் முந்தி உள்ளன.

ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளில் காங் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சி அரியணை ஏறும் வாய்ப்புகள் பிரகாசமாகி இருக்கின்றன.  கேசிஆர் கட்சியை தோற்கடித்ததில் பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் 6 முக்கிய வாக்குறுதிகளை அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

மகாலட்சுமி திட்டம் மூலம மகளிருக்கு மாதம் 2500 ரூபாய், எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வினியோகம், பேருந்தில் மகளிர்க்கு இலவச பயணம், விவசாயிகளின் குத்தகை நிலத்துக்கு ஆண்டுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய், 200 யூனிட் மின்சாரம் இலவசம், இளைஞர்கள், முதியவர்களுக்கு திட்டம் என சூப்பராக அறிவித்து மக்களை ஆதரவை காங். பெற்று இருக்கிறது.

சூறாவளி பிரச்சாரம், தலைவர்களின் ஆவேச உரைகள், சுவர் விளம்பரம் என எவ்வளவு இருந்தாலும் வாக்குறுதிகளே காங்கிரசை கரை ஏற்றி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வரும் 2024ம் ஆண்டு தேர்தலில் மக்கள் ஆதரவை அக்கட்சி பெற வேண்டும் என்பதே கட்சி தொண்டர்கள் கருத்தாக உள்ளது.

Most Popular